18th July 2017

18th July 2017

பில்டர்ஸ் பொறியியல்  கல்லூரியில் மாணவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை பதிவு முகாம் :

பில்டர்ஸ் பொறியியல்  கல்லூரியில் மாணவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை பதிவு முகாம்  இன்று (18.07.2017)  நடைபெற்றது.  இதில் பதினெட்டு வயது நிரம்பிய மாணவ மாணவியர்களுக்கு வாக்காள அடையாள அட்டை பெறுவதின்  அவசியத்தை எடுத்துரைத்து ஸ்ரீ கிரேஸ் பச்சாவு, துணை மாவட்ட ஆட்சியர், தாராபுரம் அவர்கள்,  முகாமை துவக்கி வைத்தார்.மாணவ மாணவியர் ஆன்லைன் பதிவின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்தனர். இந்த முகம்மில் காங்கயம் வட்டார தாசில்தார் திரு. வெங்கட லட்சுமி அவர்கள், மற்றும்  தேர்தல் துணை  வட்டார தாசில்தார் திரு.ஜெகதீசன் அவர்களும் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

பில்டர்ஸ் பொறியியல்  கல்லூரியின் இயக்குனர் முனைவர்  பி.கோவிந்தசாமி அவர்களின்  ஆலோசனையின்படி, கல்லூரியின் நோடல் அலுவலர், -மேலாண்மை துறை பேராசிரியர்  முனைவர் ஜி .சுரேஷ் அவர்களின் தலைமையில், இயந்திரவியல் துறை மாணவர்கள் சரண் செந்தூர் மற்றும் செல்வகுமார் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *