20th February 2018

20th February 2018

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கான உள்துறை போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா:


பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கான உள்துறை போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 20.2.2018,2.3.2018,19.3.2018,20.3.2018,21.3.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது.

கட்டுமானத்துறை சார்பாக நடைபெற்ற கிரியா18 விழாவிற்கு  ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி பள்ளியின்  தாளாளர் பொறியாளர் K. வைத்தீஸ்வரன்  அவர்கள் தலைமைதாங்கி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்தார்.

கணிப்பொறியியல் துறை சார்பாக நடைபெற்ற பரிபாஷா விழாவிற்கு முனைவர் K.ரவிச்சந்திரன், நிர்வாகத் துணை பொறியாளர், TWAD BOARD, ஈரோடு அவர்கள் தலைமைதாங்கி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்தார்.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக நடைபெற்ற கிராத்து விழாவிற்கு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் பணி ஓய்வுபெற்றபேராசிரியர் திரு K.நாராயணன் IIP CELL அவர்கள் தலைமைதாங்கி  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்தார்.

மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக நடைபெற்ற ஞானா விழாவிற்கு திரு S.சுந்தரமூர்த்தி CEO,சன்ஷிவ்  எலக்ட்ரானிக்ஸ் சொலுஷன்,கோயம்புத்தூர், அவர்கள் தலைமைதாங்கி  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்தார்.

இயந்திரவியல் துறை சார்பாக நடைபெற்ற மெக்கான்பிளிக்ட் விழாவிற்கு JC திரு S.கார்த்திகேயன் மேலாண்மை இயக்குநர்,பியூசர் சாப்ட் டெக்னாலஜிஸ் ஈரோடு,அவர்கள் தலைமைதாங்கி  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்தார்.

மேற்கண்ட விழாக்களில் மாணவர்களுக்கான ப்ராஜெக்ட் எக்ஸ்போ,பேப்பர் ப்ரெசென்ட்டேஷன்,காண்ட்ராப்சன் முதலான போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற  மாணவ மாணவியருக்கு  பரிசுகள் வழங்கப்பெற்றன.

மேற்கண்ட  விழாக்கள் அந்தந்த துறையின் மாணவ அஸோஸியேஷன் தலைவர் மற்றும் ஆசிரியர் பொறுப்பாளர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இவ்விழாக்கள் அனைத்தும் கல்லூரியின் முதல்வர் முனைவர் P.கோவிந்தசாமி மற்றும் மேலாண்மைத் துறை புல முதல்வர் முனைவர் A.G.V.நாராயணன் அவர்களது ஆலோசனைப்படியும், கல்லூரியின் தலைவர் திரு V.சத்தியமூர்த்தி, செயலாளர் திரு S.S.நடராஜன்,பொருளாளர் திரு R.ஈஸ்வரமூர்த்தி  மற்றும் தாளாளர் திரு K.R.தனசேகர்

ஆகியோரது தலைமையிலும் நடைபெற்று முடிந்தது.

????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *