25th November 2017

25th November 2017

காங்கேயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள்
             25.11.2017 சனிக்கிழமை  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திருப்பூர் (தெற்கு)பகுதி அலுவலகம், காங்கேயம் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வித்துறையும் இணைந்து திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவமாணவிகளுக்கு கட்டுரைஓவியம்குறுநாடகம்பேச்சு போட்டிகள் ஆகியவற்றை பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

       வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.முருகானந்தம் மற்றும் குழுவினர்  மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 70 பள்ளிகளிலிருந்து  570 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பாக விரைவில் இந்நிகழ்ச்சிக்கான  பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின்முதல்வர் முனைவர் P.கோவிந்தசாமி மற்றும் குழுவினர்கள் செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *