27th April 2017

27th April 2017

ஈபிஈடி  பொறியியல் கல்லூரியின்  மாணவர் சேர்க்கை மையம்பெருந்துறையில் நேற்று  ( 27.04.2017) துவங்கப்பட்டது . மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள்  எளிதில் அணுக  இந்த வசதி செய்யப்பட்டுள்ளது  . கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மேற்படி படிவங்கள் அனைத்தும் மையத்தில் உள்ளன .மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்களை  பற்றி பெற்றோர்  மற்றும் மாணவர்கள்  தெரிந்து கொள்வதற்காக  கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்  மையத்தில் உள்ளனர். மாணவர்கள் தங்களது பொறியியல் பட்ட படிப்பிற்கான ஆலோசனைகள்  மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஒட்ரைசால  முறையில் அணுகுவதற்க்கான விண்ணப்பம் அதாவது கவுன்சிலிங் பார்ம் பூர்த்திசெய்ய இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகின்றன. இந்த சேவை ஈரோடு, திருப்பூர்  மற்றும் காங்கேயத்தில் செயல்பட்டு வருகின்றது.
ஈபிஈடி  பொறியியல் கல்லூரியின்  மாணவர் சேர்க்கை மைய திறப்பு விழாவில்  திரு.எல் .சென்னியப்பன், தாளாளர், ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, திரு.டீ.என்.சென்னியப்பன், தாளாளர் மற்றும் செயலாளர்,கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, Dr.முத்துராமலிங்கம், துணை செயலாளர்,  கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, P.C.R.இளங்கோ, தாளாளர், யூனிக் அகாடமி, விஸ்வநாதன், முதல்வர், கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் சீனாபுரம், திரு.S.உதயகுமார்,  திரு.சுப்ரமணியம், துணை முதல்வர், KVM மேல்நிலை பள்ளி பெருந்துறை ஆகியோர்  துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.
ஈபிஈடி அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.S.D.ராமசாமி, திரு.S.C.சென்னியப்பன், திரு.K.P.கிருஷ்ணமூர்த்தி, திரு.S.அசோக் குமார், ஆகியோர் மற்றும் கல்லூரியின் தாளாளர் கே.ஆர்.தனசேகர், இயக்குனர் முனைவர் பி.கோவிந்தசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்  உடன் இருந்தனர்.
 இந்த மையத்தை 9965709396 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *