29th April 2017

29th April 2017

ஈபிஈடி  பொறியியல் கல்லூரியின்  மாணவர் சேர்க்கை மையம்பெருந்துறையில் நேற்று  ( 29.04.2017) காலை 10:30 மணியளவில்  துவங்கப்பட்டது . மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள்  எளிதில் அணுக  இந்த வசதி செய்யப்பட்டுள்ளது  . கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மேற்படி படிவங்கள் அனைத்தும் மையத்தில் உள்ளன .மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்களை  பற்றி பெற்றோர்  மற்றும் மாணவர்கள்  தெரிந்து கொள்வதற்காக  கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்  மையத்தில் உள்ளனர். மாணவர்கள் தங்களது பொறியியல் பட்ட படிப்பிற்கான ஆலோசனைகள்  மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஒட்ரைசால  முறையில் அணுகுவதற்க்கான விண்ணப்பம் அதாவது கவுன்சிலிங் பார்ம் பூர்த்திசெய்ய இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகின்றன. இந்த சேவை ஈரோடு, திருப்பூர்  மற்றும் காங்கேயத்தில் செயல்பட்டு வருகின்றது.
ஈபிஈடி  பொறியியல் கல்லூரியின்  மாணவர் சேர்க்கை மையத்தை திரு.செ.முத்துவேலன், உரிமையாளர், கோபி டெக்ஸ்ட்டைல்ஸ், கொளப்பலூர், கோபிசெட்டிபாளையம் அவர்கள் துவக்கி வைத்தார்.   திரு P.B.சீதாராமன் , கிளை மேலாளர், சிட்டி யூனியன் வங்கி, கோபிசெட்டிபாளையம், அவர்கள் முன்னிலை வகித்தார்.
ஈபிஈடி அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.V.N.வரதராஜன்,  திரு.P.சரவணன்,  திருA.லோகநாதன்,  திரு.A.P.S.வசந்த குமார், திருமதி.N.தமிழ்ச்செல்வி ராஜேந்திரன் ஆகியோர் மற்றும் கல்லூரியின் தாளாளர் கே.ஆர்.தனசேகர், இயக்குனர் முனைவர் பி.கோவிந்தசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்  உடன் இருந்தனர்.
இந்த மையத்தை 9842612656என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *