31st August 2017

31st August 2017

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம்  ஆண்டு மாணவர்களுக்கு துவக்கவிழா  ஸ்ப்ரவுட் 2017,31.8.2017  வியாழக்கிழமை அன்று  காலை 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிளஸ்2  முடித்து  தங்களது பொறியியல் படிப்பிற்காக பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியை தேர்வு செய்த மாணவ மாணவிகளுக்கு  ஸ்ப்ரவுட் 2017 என்ற பெயரில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது  .இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமதி ஸ்ரீதேவி,துணை ஆணையர், மாநில வரி, சென்னை, அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் பொறியாளர்களுக்கு அரசு ஊழியராக பணிபுரிய இருக்கும் வாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியை  பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் மரியாதைக்குரிய திரு சி.தேவராஜன், நிர்வாக இயக்குனர் – U.R.C  கட்டுமான துறை அவர்கள் தலைமை தாங்கி   நடத்தினர். மேலும்  அவர்கள் பேசுகையில் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்  என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் அறக்கட்டளை தலைவர் திரு V. சத்தியமூர்த்தி  அவர்கள், செயலாளர் திரு S .S நடராஜன் அவர்கள், தாளாளர் திரு K.R. தனசேகர் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர்  P.கோவிந்தசாமி, மேலாண்மை புலமுதல்வர் முனைவர்  A.G.V.நாராயணன் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்குபெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *