15th February 2019

15th February 2019

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மண்டல அளவில் நடந்த சென்டைஸ் போட்டியில் முதல் இடம்:

மண்டல அளவில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நடந்த கூடை பந்து போட்டியில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் இன்டர்  இன்ஜினியரிங் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அனைத்து இன்ஜினியரிங் கல்லூரி உடற்க்கல்வி இயக்குனர்கள் சார்பில் பத்தாவது செண்டைஸ் குழு போட்டிகள், சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் தொழில் நுட்ப கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. அதில் கூடை பந்து போட்டியில் பண்ணாரி தொழில் நுட்ப கல்லூரியை கால் இறுதியில் வென்று பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி அரை இறுதிக்கு தேர்வானது. அரை இறுதியில் கொங்கு பொறியியல் கல்லூரியை வென்று இறுதிசுற்றில் பி.யெஸ்.ஜி கல்லூரி உடனான போட்டியில் முதல் இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி நிர்வாகிகள், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *