31st August 2019

31st August 2019

BEC – EEE Organized RENEWABLE ENERGY DAY  celebration on 31.08.2019.  School and Polytechnic Students are participated in various competitions like (Quiz, Project Display, Paper Presentation, Oratorical competition & Drawing) in this programme.

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய கருத்தரங்கு சென்ற 31.8.2019 சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை அஸோஸியேஷன் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. கருதர்க்கிற்கு சிறப்பு விருந்தினராக திரு M பூபதி  – எலக்ட்ரிகல் மேனேஜர் , டிமேஜ் பில்டர்ஸ் திருப்பூர் மற்றும் திரு N நீலமேகம் – சோலார் இன்சார்ஜ், டிமேஜ் பில்டர்ஸ், காங்கயம் ஆகியோர் பங்கு பெற்று கருத்தரங்கை சிறப்பித்தனர்.சிறப்பு விருந்தினர் பேசுகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (ரெனீவபில் எனர்ஜி)  பற்றி பேசினார்கள். சூரிய சக்தி,காற்று ஆற்றல்,அலை ஆற்றல்,புவிவெப்ப சக்தி ஆகியவை பற்றி எடுத்துரைத்தனர். வரும்களங்களில் மேலே குறிப்பிட்ட ஆற்றலே மின்சார சக்தியை உற்பத்தி செய்ய அடித்தளங்களாக அமையும் என்று கூறினார்கள். மாணவர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இந்த விழாவில் திரு  N சிவப்பிரகாசம் – நாமக்கல் பசுமை அமைப்பு உறுப்பினர் தலைமை உரை ஆற்றினார். இந்த விழாவில் செல்வி ஷோபனா – மேலாளர் , ஆப்பிள் பைனான்சியல் சேவை , நாமக்கல் வாழ்த்துரை வழங்கினார்.  பில்டர்ஸ் கல்லூரியின் முதல்வர் S கோபாலகிருஷ்ணன் , துறை தலைவர் பேராசிரியர் G மஹேந்திரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெற்றனர்.  கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னளவியல் துறை பேராசிரியர் முனைவர் S சரவணன் அவர்கள் செய்திருந்தார்.பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் கல்லூரி நிர்வாகிகள் தலைவர் V சத்யமூர்த்தி அவர்கள், தாளாளர் மற்றும் செயலாளருமான P .பாலசிவகுமார் அவர்கள் மேலும் கல்லூரியின் பொருளாளர் R . ஈஸ்வரமூர்த்தி அவர்களும்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *